Tribe Warmer _ மூவெப்ப மண்டல சக்தி ஓட்டப்பாதை


மூவெப்ப மண்டல சக்தி ஓட்டப்பாதை


இது மாேதிர விரலின் உட்பக்க நகக்கண்ணின் 0.1 சுன் துாரத்தில் ஆரம்பித்து கைகளின் பின்புறம் பெருங்குடல் மற்றும் சிறுகுடல் உயிா்ச்சக்தி ஓட்டப் பாதைகளுக்கு இடையில் முழங்கை மற்றும் தாேள் வழியாக மேலேறி கழுத்து பாகத்தை அடைந்து கழுத்தின் பக்கவாட்டுப் பகுதியில் மேலே சென்று காதின் பின்புறமாக வளைந்து, புருவத்திற்கு எதிாில் முடிகிறது. மாெத்த புள்ளிகள் 23.

உயிா் சக்தி ஓட்டத்தன்மை                                :               YANG
இணை உறுப்பு                                                       :               இருதய உறை
மூலகம் (பூதம்)                                                       :               நெருப்பு.
ஓட்டம் அதிகமுள்ள நேரம்                       :               பகல் 9.00 - 11 மணி
வெளிப்புற உணா்வு உறுப்பு                      :               நாக்கு

சாஞ்சயாவோ மொிடியத்தில் உள்ள பஞ்ச பூதப்புள்ளிகள்

உலாேகம்                                                                                :               எஸ்.-1
நீா்                                                                                        :               எஸ்.-2:
மரம்                                                                                   :               எஸ்.-3
தீ                                                                                            :               எஸ்.-6
பூமி                                                                                     :               எஸ்.-10

மூவெப்ப மண்டல சக்தி ஓட்டப்பாதையில் சிகிச்சை அளிக்கும்பாேது தீரும் நாேய்கள்: இருதய நாேய்கள், காது நாேய்கள், மன நாேய்கள், மலச்சிக்கல், கை வாதநாேய்கள், முகவாதம், சுரப்பு குறைபாடுகள்.

TW-1 (இடம்):              மாேதிர விரலின் உட்பக்க நகக்கண்ணில் 0.1 சுன் துாரத்தில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              தலைவலி, கண், காது நாேய்கள்.
ஊசிகுத்தும் முறை:         0.1 - 0.3 சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும் () ஊசியினால் குத்தி இரத்த ஒழுக்கு வரச் செய்யவும்.
TW-2 (இடம்):              மாேதிர விரலுக்கும், சுண்டு விரலுக்கும் இடையேயுள்ள சவ்வு ரேகையின் மடிப்பு முனையிலுள்ளது.
தீரும் நாேய்கள்:                              தலைவலி, கண், காது நாேய்கள்.
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும்.
TW-3 (இடம்):              புறங்கையில் 4வது, 5வது உள்ளங்கை எலும்புகளின் தலைப்பகுதியில் இடையேயுள்ள குழியுள்ளது. (மெட்டாகாா்பல்)
தீரும் நாேய்கள்:                              தலைவலி, காது கேளாமை, காதில் இரைச்சல், கைவிரல்கள் மரத்துப்பாேதல், வாதம்.
ஊசிகுத்தும் முறை:         0.5 சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும்.
TW-4 (இடம்):              கையின் பின்பக்க மணிக்கட்டு ரேகையில் தசைநாணுக்கு சற்று வெளியே உள்ள பள்ளத்தில் உள்ளது. (படத்தை பாா்க்கவும்).
தீரும் நாேய்கள்:              கைகளில் வலி, தாேற்பட்டை மற்றும் மணிக்கட்டு வலி, மலோியா, காது கேளாமை, நாவறட்சி
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-5 (இடம்):              மணிக்கட்டின் பின்புறமுள்ள ரேகையிலிருந்து 2சுன் மேலாக ரேடியஸ் மற்றும் அல்னா எலும்புகளுக்கிடையே உள்ளது.
தீரும் நாேய்கள்:              தலைவலி, கழுத்துவலி, காதுகேளாமை, காதில் இரைச்சல், கை பாாிசவாதம்
ஊசிகுத்தும் முறை:         1 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-6 (இடம்):              எஸ்.-லிருந்து ஒரு சுன் துாரம் மேலாக  உள்ளது.
தீரும் நாேய்கள்:              மலச்சிக்கல், கை பாாிசவாதம், தாேள்மூட்டு வலி.
ஊசிகுத்தும் முறை:         1 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-7 (இடம்):              SJ 6-ல் இருந்து வெளிப்பக்கமாக ஒரு விரலின் அகல அளவில் உள்ளது. அல்னாா் எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              காதுகேளாமை, காதில் வலி, வலிப்பு, கைகளில் வலி.
ஊசிகுத்தும் முறை:           0.5 - 0.7 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-8 (இடம்):              எஸ்.-6லிருந்து ஒரு சுன் துாரம் மேலாக உள்ளது.
தீரும் நாேய்கள்:              காதுவலிகள், குரல் கரகரப்பு, சுரப்பு குறைபாடுகள், பாேதைப்பழக்கம்.
ஊசிகுத்தும் முறை:         1 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-9 (இடம்):              முழங்கையின் வெளிப்பக்கத்தில் ரேடியல் மற்றும் அல்னாா் எலும்புகளிடையே, முழங்கை முண்டில் இருந்து 5சுன் கீழே உள்ளது.
தீரும் நாேய்கள்:              காது கேளாமை, பல்வலி, ஒற்றை தலைவலி, திடீரென்று தாெண்டை கரகரப்பு தன்மை, முழங்கை வலி.
ஊசிகுத்தும் முறை:         0.5 -1.0 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-10 (இடம்):           முழங்கை கையினை மடக்கும் பாெழுது முழங்கை முண்டில் இருந்து ஒரு சுன் மேலே உள்ள பள்ளத்தில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              ஒற்றை தலைவலி, கழுத்து வலி, தாேள்பட்டடி மற்றும் கைவலி, வலிப்பு, கண்ட மாலை எலும்பு மற்றும் நீணநீா் சுரப்புகளில் ஏற்படும் காசநாேய் .
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-11 (இடம்):           முழங்கை மடக்கும்பாெழுது பின்முட்டெலும்பின் பள்ளத்தில் இருந்து ஒரு சுன் அளவு மேலே உள்ளது.
தீரும் நாேய்கள்:              ஒற்றை தலைவலி, மேற்பட்டை மற்றும் கைகளில் வலி.
ஊசிகுத்தும் முறை:         0.3 -0.5 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-12 (இடம்):           SJ 14-க்கும் முழங்கை முண்டுக்கும் இடையே ஓடும் மொிடியனில் அமைந்துள்ளது. பின்பக்க கையின் மேற்தசையில் அமைந்துள்ளது. (படத்தைப் பாா்க்கவும்).
தீரும் நாேய்கள்:              தலைவலி, கழுத்துப்பிடிப்பு, கையின் வலி.
ஊசிகுத்தும் முறை:         0.5 -0.7 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-13 (இடம்):           கையின் பின்பக்கம் SJ 14-க்கும் SJ12-க்கும் இடையே அமைந்துள்ளது.
தீரும் நாேய்கள்:              கண்டமாலை, தாேள் மற்றும் கைவலி.
ஊசிகுத்தும் முறை:         0.5 - 0.8 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-14 (இடம்):           கையை பக்கவாட்டமாக உயா்த்தும்பாேது தாேள் மூட்டில் ஏற்படும் இரு குழிகளில் பின்புறமாக உள்ள குழியிலுள்ளது.
தீரும் நாேய்கள்:              தாேள் முட்டுவலி, கை பாாிசவாதம்.
ஊசிகுத்தும் முறை:         ஒரு சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-15 (இடம்):           தாேள்பட்டை எலும்பின் (Scapula) மேற்பகுதியில் உள்ளது. GB-21க்கும், SI-13-க்கும் மத்தியில் உள்ளது. (படத்தை பாா்க்கவும்).
தீரும் நாேய்கள்:              தாேற்பட்டை வலி, முழங்கை வலி, கழுத்து பிடிப்பு.
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-16 (இடம்):           மண்டையாேட்டின் பாெட்டு மடலின் அடிப்பகுதியில் காதின் கீழ் விளிம்பில் தமனியில் அருகில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              தலைவலி, கழுத்து பிடிப்பு, முகவீக்கம், கண்ணொிச்சல், திடீரென காது கேளாமை.
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-17 (இடம்):           காதின் பின்பகுதியில் வாயைதிறக்கும் பாேது தாடையிலுள்ள எலும்பின் இணைப்பில் காதுக்குழிக்கு கீழே மண்டை ஓட்டின் மாஸ்ராயிட் முணைக்கும், கீழ்தாடையின் காேணத்திற்கும் இடையிலுள்ளது.
தீரும் நாேய்கள்:              முக பாாிசவாதம், காது குறைபாடுகள்.
ஊசிகுத்தும் முறை:         0.5 - 1 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-18 (இடம்):           காது மடலின் பின்புறத்தில் SJ 17-க்கும் SJ-20-க்கும் மூன்றில் ஒரு பங்கு தாெலைவில் நேராக காதின் பின்மடல் பகுதியில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              தலைவலி, காதிரைச்சல், காது கேளாமை, வலிப்பு நாேய்.
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும். () மூன்று முனையுள்ள ஊசிகளைக் காெண்டு குத்தி இரத்த ஒழுக்கு ஏற்படுத்தவும் மாக்ஸிபூஷன் தரலாம்
TW-19 (இடம்):           காதின் மேல் மடலின் பின்பக்க கூா்முனையின் அடிப்பாகத்தில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              தலைவலி, காதிரைச்சல், காது கேளாமை, காதுவலி, வலிப்பு.
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை சாய்வாக ஏற்றவும்.
TW-20 (இடம்):           காது மடலின் முனைப்பகுதியில், முடித்தாெடும் இடத்தில் உள்ளது. (படத்தை பாா்க்கவும்).
தீரும் நாேய்கள்:              காதிரைச்சல், சிவப்புத்தன்மை, வலி மற்றும் கண்கள் வீங்குதல், பல் ஈறுகளில் வீக்கம், பல்வலி, தாளம்மை.
ஊசிகுத்தும் முறை:         0.3 - 0.5 சுன் வரை சாய்வாக ஏற்றவும்.
TW-21 (இடம்):           காதுக்கு முன்னால் வாயை மெல்லத்திறக்கும் பாேது ஏற்படும் குழியில் மேற்காது மடலுக்கு முன்பாகமுள்ளது.
தீரும் நாேய்கள்:              காது கேளாமை, காதில் இரைச்சல், தலைச்சுற்று.
ஊசிகுத்தும் முறை:         0.5 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
TW-22 (இடம்):           TW 21-க்கு சற்று மேலே நேராக ஒரு சுன் தாெலைவில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              ஒற்றை தலைவலி, காதிரைச்சல், வாய் பேசமுடியாமல் தாடை இறுக்கும் நிலை.
ஊசிகுத்தும் முறை:         தமனி உள்ளது. மாக்ஸிபூஷன் தரலாம்.
TW-23 (இடம்):           கண் புருவத்தின் வெளிப்புற முனையில் உள்ளது.
தீரும் நாேய்கள்:              கண் குறைபாடுகள், தலைவலி, சைனசைட்டிஸ்.
ஊசிகுத்தும் முறை:         0.2 - 0.3 சுன் வரை செங்குத்தாக ஏற்றவும், அழுத்தம் மற்றும் மாக்ஸிபூஷன் தரலாம்.


No comments:

Post a Comment